Thursday, February 1, 2018

தமிழ் மொழி அறிவோம் : 1

தமிழ் மொழி அறிவோம் : 1
---------------------------------------------
தமிழில்
உயிர் எழுத்துக்கள் 12 : இவை அ முதல் ஓள வரை. இவை காற்றின் (உயிரின்?) ஒலிகள். இவற்றை ஒலிக்கும் பொழுது உதடுகள் தொடாது, வாய் மூடாது.
மெய் எழுத்துக்கள் 18 : இவை க் முதல் ன் வரை இவை உடம்பின் ஒலிகள். இவற்றை உச்சரிக்கும் பொழுதே உடம்போடு ஒட்டிக்கொள்ளும்.
உயிர்மெய் எழுத்துக்கள் 12 x 18 = 216, உயிரும் உடம்பும் சேர்ந்தவை க் + அ = க, க் + ஆ = கா. இந்த 216 எழுத்துக்களும் உயிருடன் மே சேர்ந்தே உயிரோட்டமாக உண்டாக்கப்பட்டன.
ஓவொரு குறில் ஒலிக்கும் 1 மாத்திரை (அளவு - செகண்ட்) நெடிலுக்கு இரண்டு மாத்திரை.
தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழிகளிலும் (ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள்) மெய் எழுத்துக்கள் என்ற கான்செப்டே கிடையாது.
Vovels (உயிர் எழுத்துக்கள்) மற்றும் Consonants என்று சொல்லக்கூடிய உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமே உண்டு. அந்த உயிர் மெய் எழுத்துக்கள் எப்படி உண்டாயின என்றால் அதற்கு பதில் கிடையாது. அது ஆதியில் இருந்தே இருந்தது என்பார்கள். தமிழில் இருந்து எடுத்துக்கொண்டோம் என ஒத்துக்கொள்ள மறுப்பார்கள்.
"BUS" இதை எப்படி உச்சரிப்பீர்கள் புஸ் என்றா அல்லது பஸ் என்றா?
"AND" -> A =அ
"Angel" -> A = எ
"Can" -> CA = கே
"Card" -> CA = கா
"Chord" -> CH = கா
தலை சுற்றுகிறது அல்லவா?
நீங்கள் ஆங்கிலம் படிக்கும் பொழுது ஒவொரு வார்த்தையும் உச்சரிக்க கற்றுக்கொள்ளவேண்டும் ஆனால் தமிழில் அப்படி அல்ல.
வ + ண + க் + க + ம் = வணக்கம். தனியாக கூறும் பொழுதும் சேர்த்து சொல்லும் பொழுதும் எழுத்துக்களின் உச்சரிப்பு ஒலிகள் மாறாது. தமிழில் எந்த சொற்களை எடுத்துக்கொண்டாலும் எழுத்துக்களின் உச்சரிப்பு ஒலிகள் மாறாது. உங்களுக்கு மயக்கமே வராது.
இதையே தொல்காப்பியம் "தமிழ் மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி" என்று சொல்கிறது.
இந்த 12(உயிர்) + 18 (மெய்) + 216 (உயிர்மெய்) + ஃ தவிர வேறு எந்த எழுத்துக்களும் தமிழ் கிடையாது.
ஆனால் ஒரு சோகம் தற்போது 
1. ஷ 2. க்ஷ 3. ஸ 4. ஜ 5. ஹ என்ற ஐந்து எழுத்துக்களை தமிழில் சேர்த்து விட்டனர். இந்த எழுத்துக்களை தவிர்க்கவும். இவ்வெழுத்துக்களை தமிழ் எழுத்துக்கள் என என்னவும் வேண்டாம்.
ஜெயலலிதா என்ற பெயரில் உள்ள ஜெ தமிழ் கிடையாது
அது தவிர சில எழுத்துக்களின் உச்சரிப்பும் ச மற்றும் ப மாறிவிட்டது.
ச - இது ஒரு வல்லினம் "கசடதபற" - வல்லினம் இதில் ச இதை "CHA" என்றே ஒலிக்க வேண்டும். ஆனால் இது மெல்லினமாகி விட்டது. செல்வம் இதை "CHELVAM" என்று தான் உச்சரிக்க வேண்டும் "SELVAM" என்று உச்சரிக்க கூடாது.
ப = பத்மா என்ற பெயரை "PADMA" என்று தான் உச்சரிக்க வேண்டும் "BADMA" என்று உச்சரிக்க கூடாது.
- தொடரும்